புது வகையான 3 சைபர் க்ரைம் குற்றம் குறித்து க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பொதுமக்கள் படிக்கலாம்: சென்னை மாநகர காவல்துறை தகவல்

சென்னை: புது வகையான 3 சைபர் க்ரைம் குற்றங்கள் தடுப்பது குறித்த க்யூஆர் கோடு புத்தகத்தை பொதுமக்கள் செல்போன்களில் ஸ்கேன் செய்து படிக்கலாம் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சைபர் குற்றவாளிகள் உபயோகிக்கும் 30 குற்ற செயல் வழிமுறைகளை விக்கி ‘முத்துவும், 30 திருடர்களும்’ என்ற தலைப்பில் சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கடந்த மாதம் வெளியிட்டார்.

சைபர் கிரிமினல்கள் அடிக்கடி தங்கள் யுக்திகளை மாற்றி புதுவகையில் மக்களை ஏமாற்றுபவர்கள் என்ற காரணத்தால் அதுகுறித்து தகவல்களை மக்களிடையே உடனுக்குடனே கொண்டு செல்ல வேண்டும் என்ற  நோக்கில் க்யூஆர் கோடு வடிவில் புத்தகத்தை சென்னை மாநகர காவல்துறை கொண்டு வந்துள்ளது. புத்தகம் வெளியிட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், தற்போது 3 சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது.

* ஆன்லைன் ரம்மி வாயிலாக பண மோசடி.

* காவல் அதிகாரிகள் போல் பேசி மிரட்டி பணம் பறிக்கும் மோசடி.

* வங்கி கணக்கில் இருந்து பணம் தவறுதலாக டெபிட் ஆனதாக கூறி மோசடி.

இதுகுறித்த விளக்க படங்களுடன் குற்ற செயல்வகை முறைகள் தொகுக்கப்பட்டு, அதே க்யூஆர் கோடில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதனை செல்போனில் ஸ்கேன் செய்து படித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: