தடம் புரண்டது மின்சார ரயில்

பெரம்பூர்: கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து 8 பெட்டிகளை கொண்ட மின்சார ரயில் இன்ஜின் மாற்றுவதற்காக திருவொற்றியூர் சென்றுள்ளது. பிறகு திருவொற்றியூலிருந்து மீண்டும் பேசின்பிரிட்ஜிக்கு வந்தது. அங்கிருந்து இன்ஜின் மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் பீச் ரயில் நிலையம் செல்வதற்காக புறப்பட்டபோது ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகி ரயில் செல்ல முடியாமல் நின்றது. பேசின் பிரிட்ஜ் ஏழாவது பிளாட்பார்ம் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.

அந்த பிளாட்பார்மில் எந்தவித ரயில்களும் இயக்கப்படாது என்ற காரணத்தினால் மற்ற ரயில் சேவைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே தொழில்நுட்ப பொறியாளர்கள் தொடர்ந்து ரயில் இன்ஜின் சக்கரங்களை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். நேற்று மதியம் பழுதை சரி செய்த பின்பு மீண்டும் ரயில் இயக்கப்பட்டது. மீண்டும் சக்கரங்கள் தடம் புரண்டு ரயில் இன்ஜின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகி நின்றது. மீண்டும் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: