ராஜஸ்தானில் அரசு அதிகாரிகள் வீட்டில் சோதனை; ரூ.23 கோடி ரொக்கம், 2 கிலோ தங்கம் பறிமுதல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அங்கு அரசுத் துறை அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அரசு அதிகாரிகளின் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.23 கோடி, 2 கிலோ தங்கம், 35 கிலோ வெள்ளி, பிஎம்டபிள்யூ சொகுசு கார், பைக், விலையுயர்ந்த வளர்ப்பு பிராணிகள், பல கோடி மதிப்பிலான பிளாட்கள், கடைகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சில அதிகாரிகள் தங்களது வருமானத்துக்கு அதிகமாக 1300 மடங்கு சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: