×

தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 852 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட்: அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 852 மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு மதுபான (டாஸ்மாக்) கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யபடுவதாகவும், குளிர்வுட்டபட்ட மதுபானங்கள் அதிகபட்ச விற்பனை விலையை விட அதிகமாக விற்பனை செய்யபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில்
2,822 பேர் மீது டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

852 மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளதாகவும்,இதே புகாருக்கு துணை போன  1,970 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூடுதல் விலைக்கு  மதுவை விற்பனை செய்த விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களிடமிருந்து 4.61 கோடி ரூபாய் அபராதம் வசூலித்திருப்பதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக பார் நடத்தியதாக கூறி 798 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திமிஸி போடப்பட்டுள்ளது.

மேற்கூறிய நான்கு மாவட்டங்களில் பார் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சட்டவிரோதமாக பார் நடத்தி மதுபானம் அருந்த அனுமதித்த பார் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு ஆயதீர்வத்துறை அமைச்சர் செந்தில் பாலஜி தகவல் கூறியுள்ளார்.


Tags : Tamil Nadu ,Minister , Tamil Nadu, Liquor, sale at additional price, Tasmac employees suspended
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...