நெல் பொரி உருண்டை

செய்முறை:

நெல் பொரியை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வேறு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி பின் பாகு காய்ச்சவும். பாகில் ஏலப்பொடி, சுக்குப்  பொடி சேர்க்கவும். வெறும் வாணலியில் எள்ளை வறுத்து தனியே வைக்கவும். அதே வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி தேங்காய் பற்களை வறுத்து இரண்டையும் பாகில் சேர்க்கவும். பாகு உருட்டுப் பதம் வந்ததும், சிறிது சிறிதாக பொரியில் ஊற்றி கரண்டியால் கலந்து விடவும். கையில் நெய் அல்லது அரிசி மாவு தடவிக் கொண்டு உருண்டைகளாக உருட்டவும்.

Related Stories: