×

என்.எல்.சி. நிறுவனம் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: கரிவெட்டி கிராம மக்கள் போராட்டம்..

கடலூர் : நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்காக நில கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கரிவெட்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக பணிக்காக பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சேத்தியார் தோப்பு அருகே கத்தாழை ஊராட்சியில் உள்ள கரிவெட்டியிலும் நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி. நிறுவனம் முயன்று வருகிறது.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நில அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் மீண்டும் அப்பகுதிக்கு வரவிருந்த நிலையில் கிராம மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வயல்களிலும், சாலைகளிலும் அமர்ந்து 100-க்கும் மேற்பட்டோர் என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் காவல்துறையினருடன் அங்கு என்.எல்.சி. அதிகாரிகளும் வருகை தந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம் அவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். நிலம் கையகப்படுத்தப்பட்டால் கரிவெட்டி கிராமத்தில் கூடுதல் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் நிபந்தனை விதித்தனர்.  


Tags : N.N. l. RC Company ,Karivetti , NLC, land, tiller, struggle
× RELATED முழுமையான இழப்பீடு கோரி என்எல்சி...