மீஞ்சூர் அருகே பரபரப்பு; சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை முயற்சி: பால்வண்டி வந்ததால் திருடர்கள் ஓட்டம்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே சூப்பர் மார்க்கெட்டின் ஷட்டரை உடைத்தபோது பால்வண்டி வந்ததால் திருடர்கள் தப்பியோடி விட்டனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ரமணா நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (50). இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றார். இன்று அதிகாலையில் 2 பேர் ஷட்டரை உடைத்துள்ளனர். அந்த சமயத்தில் சூப்பர் மார்க்கெட்டுக்கு வழக்கமாக வரும் பால் வண்டி வந்ததால் உடைக்கப்பட்ட பாதி ஷட்டரை விட்டுவிட்டு இரண்டு பேரும் அங்கிருந்து பைக்கில் தப்பிவிட்டனர். இதையடுத்து பால் வேன் டிரைவர் சத்தம் போட்டதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வந்து திருடர்களை தேடி பார்த்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சுந்தர்ராஜன் வந்து பார்த்தார். பின்னர் இதுபற்றி மீஞ்சூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மீஞ்சூர் அடுத்த வள்ளூரில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் வசித்துவரும் அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 110 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: