திருவள்ளூர்: அம்பேத்கர் நினைவுநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக்குழு சார்பில், மாவட்ட அமைப்பாளர் ஜெ.சங்கர் ஏற்பாட்டில், திருவள்ளூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.சந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன், ஜெ.சேகர், டி.கே.பாபு, டி.டி.சதீஷ்குமாரன், ஜெ.எஸ்.தியாகராஜன், ஜெ.எஸ்.அஜித்குமார், ஜெ.எஸ்.அபி என்கிற திலிப்குமரன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான சி.சு.ரவிச்சந்திரன், நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் ஆகியோர் வரவேற்று பேசினர்.