புரோ லீக் கபடி மும்பை-டெல்லி குஜராத் ஐதராபாத் இன்று மோதல்

ஐதராபாத்: புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிந்து பிளே ஆஃப் சுற்று தொடங்கவுள்ளது. நேற்றிரவு நடந்த முதல் போட்டியில் புனேரி பல்டன் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட புனேரி பல்டன் அணி 44-30 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்ஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இதிலும் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஜெய்ப்பூர் அணி, ஹரியானா டீலர்ஸை 44-30 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்டன், பெங்களூரு புல்ஸ் மற்றும் யுபி யோதாஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்று 7.30 மணிக்கு மும்பை-டெல்லி அணியும், 8.30 மணிக்கு குஜராத்-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

Related Stories: