ரிசர்வ் வங்கியின் நிதி நிர்வாக அறிக்கை நாளை வெளியீடு: மீண்டும் உயருமா வங்கி வட்டி விகிதம்?

டெல்லி: ரிசர்வ் வங்கியின் நிதி நிர்வாக அறிக்கை நாளை வெளியாக உள்ள நிலையில் வட்டி விகிதம் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பணவீக்க விகிதம் குறைந்துள்ளதால் குறுகிய கால கடனுக்கான வட்டி விகித உயர்வு பெரிதாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் வங்கி வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.35 சதவீதம் உயர்த்தக்கூடும் என்று கூறியுள்ளனர். 3 பொருளாதார நிபுணர்கள் வங்கி வட்டி விகித உயர்வு 0.25 சதவீதமாக இருக்கும் என்றும் ஒரே ஒரு நிபுணர் 0.5 சதவீதம் வரை இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.  அமெரிக்க மத்திய வங்கியும் குறைந்த அளவுக்கே வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை ஒட்டியே இந்தியாவிலும் வட்டி விகித உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, நேற்று (டிசம்பர் 5) முதல் டிசம்பர் 7ம் தேதி வரை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டத்தில், ரெப்போ விகிதம் மேலும் 35 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கியானது, 35 அடிப்படைப் புள்ளிகளை உயர்த்தும் பட்சத்தில், ரெப்போ விகிதமானது 6.25 புள்ளிகளாக அதிகரிக்கும். இது வங்கிகளில் சாமானியர்கள் பெற்றுள்ள தனிநபர் கடன், வாகனக் கடன்,  வீட்டுக்கடன் ஆகியவற்றுக்கான மாதாந்திர தவணைத் தொகையில்தான் எதிரொலிக்கும் என்பதால், ரெப்போ வட்டி விகிதம் நேரடியாக பொதுமக்கள் மீதே சுமையாக மாறும் அபாயம் எழுந்துள்ளது.

Related Stories: