கறம்பக்குடி அருகே அரசு பேருந்துகளில் ஆபத்தான பயணம்-கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை

கறம்பக்குடி : மருதன்கோன்விடுதியில் அரசு கல்லூரிக்கு மாணவர்கள் சென்றுவர கூடுதலாக பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி கிராமத்தில் அரசு கலை கல்லூரி அமைந்துள்ளது.கடந்த ஆட்சியில் இக்கலை கல்லூரிக்கு பேருந்துகள் பற்றாக்குறையாக உள்ளது என்றும், கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் இக்கல்லூரிக்கு தினந்தோறும் ஏராளமான மாணவ, மாணவிகள் அரசு பேருந்தில் கல்வி பயில வந்து செல்கின்றனர்.

பேருந்துகள் கறம்பக்குடி, பட்டுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய வழி தடங்களில் இருந்து குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் தினம்தோறும் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள் சென்ற அரசிடம் கோரிக்கை வைத்தும் நிறைவேற்ற படாததால் மன விரக்தியில் இருந்து வருகின்றனர்.

தற்போது மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் நலன் கருதி அரசு கலைக் கல்லூரி மாணவ- மாணவிகள் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட அரசும் போக்குவரத்து துறையும் அனைவரின் நலன் கருதி கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: