காட்டேரி தூரட்டி கிராமத்தில் சமுதாயக் கூடத்தை திறக்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

ஊட்டி :  ஊட்டி அருகேயுள்ள காட்டேரி தூரட்டி கிராமத்தில் சமுதாயக்கூடத்தை திறக்க வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஊட்டி அருகேயுள்ள தூரட்டி கிராமம் உள்ளது. இங்கு படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இரு பிரிவுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் விழா நடத்துவதற்காக அங்குள்ள சமுதாயக் கூடத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு தரப்பினரும் அந்த சமுதாயக் கூடத்தை விழா நடத்துவதற்காக கேட்டுள்ளனர். இந்நிலையில், இரு தரப்பிரனரிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதில், ஒரு தரப்பினர் அதிகரட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கவே, அவர்கள் உடனடியாக சமுதாய கூடத்தை பூட்டியுள்ளனர். இதனால், அதில் யாரும் விழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு தரப்பு மக்கள் சமுதாய கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்றுகலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, இது தொடர்பான மனு ஒன்றையும் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். தூரட்டி கிராமத்தில் சமுதாய கூடத்தை திறக்கக் கோரி 20க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: