தற்கொலை அல்ல கொலை: கேரளாவில் மனைவியை தீ வைத்து கொன்ற கணவன் 9 ஆண்டுகளுக்கு பின் கைது..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் தற்கொலை என்று முடிக்கப்பட்ட வழக்கில் 9 ஆண்டுகளுக்கு பின் கொலை என கண்டுபிடிக்கப்பட்டு கணவன் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் நெய்மம் பகுதியை சேர்ந்த அஸ்வதி 9 ஆண்டுகளுக்கு முன் வீட்டில் தீக்காயங்களுடன் உயிரிழந்தார். அஸ்வதி மரணம் குறித்து உள்ளூர் போலீஸ் விசாரணை நடத்தி தற்கொலை என்று முடிவு செய்து வழக்கை முடித்தது. பின்னர், அஸ்வதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் புலனாய்வு போலீசிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

புலனாய்வு போலீசார் அஸ்வதியின் உடற்கூறு மருத்துவ ஆய்வு முடிவுகளை மீண்டும் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து, அஸ்வதியின் கணவர் ரிதீஸிடம் நடத்திய விசாரணையில், மனைவி அஸ்வதியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொன்றதை ஒப்புக்கொண்டார். மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட கணவர் ரிதீஸை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை என்று முடிக்கப்பட்ட வழக்கில் 9 ஆண்டுகளுக்கு பின் கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: