சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

டெல்லி: சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.ஒரு கலாசாரத்தை காப்பது அந்ததந்த அரசுகளின் கடமை எனவும் ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு வாதிட்டது. ஜல்லிக்கட்டு என்ற தமிழர்களின் கலாசாரத்தை காப்பது அரசின் கடமை மட்டுமல்ல பொறுப்பும் கூட என்று தமிழக அரசு வாதம் செய்து உள்ளது. கலாசார அடையாளம் என்பதால் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஜல்லிக்கட்டை காண வருகின்றனர் என்று தமிழக அரசு கூறியுள்ளது.  

Related Stories: