சட்ட மாமேதை அம்பேத்கரின் 66வது நினைவுநாள்!: நாடாளுமன்ற வளாகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி..!!

டெல்லி: இந்தியாவின் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணல் அம்பேத்கரின் உருவ படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் புத்த பிக்குகளும் பங்கேற்றன.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகா அர்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அண்ணல் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் நினைவு நாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என சூளுரைத்து உறுதி ஏற்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில், அம்பேத்கரின் உருவ படத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 

Related Stories: