சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடுவே இருந்த இந்திரா காந்தி சிலை அகற்றிய காங்கிரசார்: கடும் போக்குவரத்து நெரிசல்..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நடுவே இருந்த இந்திரா காந்தி சிலையை காங்கிரஸ் கட்சியினர் அகற்றியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவு இல்லம் எதிரே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 1988ம் ஆண்டு வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி சிலையானது சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்து வந்தது. இதனால் கடந்த 26ம் தேதி தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் இந்திரா காந்தி சிலையை அகற்ற முற்பட்ட போது காங்கிரஸ் கட்சியினர் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்திரா காந்தி சிலையை அகற்றுவதை சில நாட்கள் தள்ளி வைத்தனர்.

அதனை தொடர்ந்து இன்று காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தி சிலையை அகற்றி ராஜீவ் காந்தி நினைவகம் நுழைவாயிலில் அருகே வைத்தனர். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக சுமார் 4 கி.மீ. தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சென்னை, பூவிருந்தவல்லி, ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலைக்கு பணிக்கு செல்வோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related Stories: