மீண்டும் சரிய தொடங்கும் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.40,080க்கு விற்பனை..இல்லத்தரசிகள் நிம்மதி..!!

சென்னை: வாரத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கம் விலை சற்று குறைவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. நேற்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.232 உயர்ந்திருந்த நிலையில் தற்போது ரூ.280 விலை குறைந்துள்ளது. தங்கம் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. தினசரி ஏற்ற இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வந்தாலும், தங்கத்தின் மீதான மோகம் மட்டும் மக்களுக்கு குறையவில்லை.  தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தினசரி சந்தை நிலவரத்தை பொருத்து காலை, மாலை என்று இரு முறை நிர்ணயிக்கப்படுகிறது. முக்கிய பண்டிகை நாட்கள், திருமணங்கள் அதிகம் நடைபெறும் சுப முகூர்த்த மாதங்கள் மற்றும் நாட்கள் போன்ற சந்தர்ப்பங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

இது தவிர அதிக விற்பனை நடக்காத நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து காணப்படும். நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ரூ.5,045க்கும், சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.40,360க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் அதிகரித்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.40,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,010க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி ஒரு கிலோ ரூ.1,700 குறைந்து ரூ.70,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று விலை சற்று குறைந்திருந்தாலும் தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.40ஆயிரத்துக்கு மேல் உயர்ந்து காணப்படுவது நடுத்தரக் குடும்பத்து மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  வரும் நாட்களில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனே காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories: