இன்குபேஷன் சென்டர்கள் மூலம் ஸ்டார்ட்அப்கள், தொழில்முனைவோர்களை உருவாக்கும் செயல்பாடு சிறப்பாக உள்ளது: அண்ணா பல்கலை அதிகாரிகள் தகவல்

சென்னை: அண்ணா பல்கலை கழகத்தில் இன்குபேஷன் சென்டர்கள் மூலம் ஸ்டார்ட்-அப்கள் மற்றும் தொழில்முனைவோர்களை உருவாக்கும் செயல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என இன்குபேஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிதி ஆயோக்கின் கீழ் 2016ம் ஆண்டு நாட்டில் புதுமை மற்றும் தொழில்முனைவோர் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் மூலம் தொடங்கப்பட்டது தான் அடல் இன்னோவேஷன் மிஷன் (ஏஐஎம்). இதன் மூலம், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் தொழில்முனைவோர்களை உருவாக்கும் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இன்றுவரை, பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் 18 மாநிலங்களில் 68க்கும் மேற்பட்ட அடல் இன்குபேஷன் மையங்களை ஏஐஎம் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.

மேலும், இதுவரை சுமார் 27 ஆயிரம் செயல்பாட்டு தொடக்கங்கள் இந்த அடல் இன்குபேஷன் சென்டர்களால் ஆதரிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 500 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் பெண்கள் தலைமையிலானவை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் 15,000 க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கியுள்ளன. இதில், ஒரு பகுதியாக சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் 5 பேர் கொண்ட குழுவுடன் 2020ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இன்குபேஷன் சென்டரில் 36 கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் புதிய வகை ஆலோசனை அடிப்படையில் ஸ்டார்ட்-அப்கள் செயல்பட்டு வருகின்றன.

தொடங்கப்பட்ட இந்த இன்குபேஷன் சென்டரில்  தற்போது 36 கம்பெனிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும் 3  கம்பெனிகள் வெளியே சென்று வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. புதிய தொழில் முறையை தொடங்க இருக்கும் யாராக இருந்தாலும் பல்கலை கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு இன்குபேஷன் சென்டர் மூலம் தங்கள் முயற்சியை வெற்றியின் பாதையை நோக்கி எடுத்து செல்லலாம் என்றனர்.

Related Stories: