ஒரே நாளில் தங்கம் விலை ரூ.232 உயர்வு

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.232 உயர்ந்தது. இது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும், அதே நேரத்தில் அதிரடியாக குறைந்தும் வந்தது. 2ம் தேதி தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,160க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. மேலும் தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.832 அளவுக்கு உயர்ந்தது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. 3ம் தேதி தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது. கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.5,016க்கும், சவரனுக்கு ரூ.32 குறைந்து ஒரு சவரன் ரூ.40,128க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் (ஞாற்றுக்கிழமை) என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், சனிக்கிழமை விலையிலேயே ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை அதிகரித்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.29 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,045க்கும், சவரனுக்கு ரூ.232 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,360க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை அதிகரித்துள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: