கோயம்பேட்டில் பூக்கள் விலை சரிவு

சென்னை: முகூர்த்த நாட்கள் அதிகளவு இல்லாததால், கோயம்பேட்டில் பூக்கள் விலை சரிந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லி ரூ.2000 க்கும் முல்லை ரூ.900 க்கும் ஜாதி மல்லி ரூ.700க்கும், கனகாம்பரம் ரூ.800க்கும், சம்பங்கி ரூ.300க்கும், பன்னீர்ரோஸ் ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.160க்கும் அரளி ரூ.200க்கும் சாமந்தி ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று பூக்களின் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ.1,500க்கும், முல்லை ரூ.700க்கும், ஜாதிமல்லி ரூ.500க்கும், காட்டுமல்லி ரூ.300க்கும், கனகாம்பரம் ரூ.600க்கும், சம்பங்கி ரூ.280க்கும், சாமந்தி மற்றும் பன்னீர் ரோஸ் ரூ.100க்கும் சாக்லெட் ரோஸ் ரூ.120க்கும் அரளி பூ ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் மூக்காண்டி கூறுகையில், ‘‘முகூர்த்த நாள் முடிந்த நிலையில், இன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. அதனால் மார்க்கெட்டில் பூக்களின் விலை குறைந்துள்ளது” என்றார்.

Related Stories: