சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை லாலு பிரசாத் விரைந்து நலம்பெற முதல்வர் வாழ்த்து

சென்னை: ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்துக்கு மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி பெற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: முதுபெரும் சமூகநீதிப் போராளியும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத்துக்கு, இன்று சிங்கப்பூர் மருத்துவமனையில் நடைபெறும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றியடைந்து, அவர் விரைந்து நலம் பெற விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: