விஏஓ வீட்டில் ரூ.10 லட்சம் நகை கொள்ளை

விழுப்புரம்: விழுப்புரம்- புதுச்சேரி சாலையில், திருநகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (63). ஓய்வு பெற்ற விஏஓவான இவர், தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் அவருடைய தம்பி மகனுக்கு பெண் பார்க்க அருகில் உள்ள பொய்யப்பாக்கம் சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிந்தது. உள்ளே பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் (13 வளையல்கள்) நகைகள் கொள்ளை போயிருந்தது. அதே பீரோவின் மற்றொரு ரகசிய அறையில் இருந்த 15 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் தப்பியது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.

Related Stories: