காங்கயம் அருகே விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், லாரி மோதி பலி

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, பரஞ்சேர்வழி கிராமம், முருகம்பாளையம், பள்ள காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (35). மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வந்தார். இவரும், மாமியார் மணி (55), அவரது மகள் உமாவதி (33), மருமகன் ரமணன் (37) ஆகிய 4 பேரும் நேற்று காலை சென்னிமலை பகுதியில் விசேஷத்திற்கு ஒரே காரில் சென்று கொண்டிருந்தனர். காரை விஸ்வநாதன் ஓட்டினார். காலை 6.30 மணியளவில் திட்டுப்பாறை அருகே பாரவலசு பகுதியில் சென்றபோது, எதிரே சாம்பல் பாரம் ஏற்றிய வந்த லாரியும், காரும் மோதின. இதில் விஸ்வநாதன், மணி ஆகிய இருவரும் அங்கேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ரமணன், அவரது மனைவி உமாவதி ஆகியோர் கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே ரமணன் உயிரிழந்தார். உமாவதி சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: