மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து 3வது நாளாக நேற்று 9,500 கனஅடியாக நீடிக்கிறது. அதேசமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 10,738 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 10,962 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், காவிரி டெல்டா பாசன பகுதியில் மழை பெய்து வருவதால், திறப்பு 1000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்மட்டம் உயரத்தொடங்கியுள்ளது. இதே நிலையில் நீடித்தால் மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது என நீர்வளத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: