ஆந்திராவில் அரசுக்கு எதிராக விவசாய பேரணி பவன் கல்யாண் கட்சி நிர்வாகி வீட்டை ஆளும் கட்சியினர் சூறை

திருமலை: அரசுக்கு எதிராக விவசாய பேரணி நடத்தப்போவதாக தெரிவித்த பவன் கல்யாண் கட்சி நிர்வாகி வீட்டை ஆளும் கட்சியினர் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூரை சேர்ந்தவர் ராமச்சந்திர யாதவ். இவர் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் முக்கிய நிர்வாகி. ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி பேரணி நடத்தப் போவதாக ராமச்சந்திரயாதவ் அறிவித்திருந்தார். மேலும், அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டியை கடுமையாக விமர்சித்திருந்தார். நேற்று பேரணி நடக்க இருந்த நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் கற்கள், கத்திகள் மற்றும் கம்பிகளுடன் புங்கனூரில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்த சூறையடினர். இதனால், விவசாய பேரணியை ஒத்திவைப்பதாக ராமசந்திரயாதவ் அறிவித்தார்.

Related Stories: