தொண்டு நிறுவனங்கள் மதமாற்றும் நிறுவனங்களாக இருக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: நாடு முழுவதும் கட்டாய மத மாற்றத்தை எதிராக வலுவான சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்ரத்தில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,’ கூடுதல் விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து விசாரணையை வரும் 12ம் தேதி ஒத்திவைப்பதாக தெரிவித்ததோடு, இத்தகைய கட்டாய மதமாற்றங்கள் என்பது இந்திய அரசியல் சாசனம் மற்றும் தேச பாதுகாப்பிற்கு எதிரானது என்றும், தொண்டு நிறுவனங்கள் கட்டாய மதமாற்ற நிறுவனங்களாக இந்த விவகாரத்தில் நிச்சயம் இருக்க முடியாத எனவும் கருத்து தெரிவித்தனர்.

Related Stories: