தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு குஜராத்தில் மீண்டும் பாஜ ஆட்சி அமைய வாய்ப்பு: இமாச்சல் பிரதேசத்தையும் தக்க வைக்கிறது

புதுடெல்லி: குஜாரத், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை வாக்குப்பதிவுக்குப் பின் வெளியான கருத்து கணிப்பில், குஜராத்தில் மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும் என்றும், இமாச்சல் பிரதேசத்தையும் பாஜ தக்க வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 75.06% வாக்குகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து, குஜராத் சட்டப்பேரவையின் 182 தொகுதிகளுக்கு டிச. 1 மற்றும் டிச.5ம் தேதி (நேற்று) இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சராசரியாக 60 சதவீத வாக்குகள் பதிவானது. இரு மாநில தேர்தல்களும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால், இந்த தேர்தல் முடிவுகளை நாடே எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது. குறிப்பாக, ‘குஜராத்தில் பாஜ இந்த முறை வெற்றி பெறுவது கடினம். ஆம் ஆத்மி அதிக இடங்களை கைப்பற்றும்’ என்று தகவல் பரவியது. இதனால், குஜராத் தேர்தல் முடிவுகள் திருப்புமுனையாக

9ம் பக்கம் பார்க்க

மொத்த தொகுதிகள்    68

பெரும்பான்மை    35

இமாச்சல் பிரதேசம்

ஊடகங்கள்    பாஜ    காங்.    ஆம் ஆத்மி    மற்றவை

ஆஜ் தக்-ஆக்சிஸ் மை இந்தியா    24-34    30-40    0    4-8

இந்தியா டிவி-மேட்ரிஸ்    35-40    26-31    0    0-3

நியூஸ் எக்ஸ் -ஜன் கி பாத்    32-40    27-34    0    1-2

ரிபப்ளிக் டிவி, பி-மார்க்    34-39    28-33    0-1    1-4

டைம்ஸ் நவ்-இடிஜி    34-42    24-32    0    1-3

டிவி 9 குஜராத்தி    33    31    0    4

ஜி நியூஸ்-பார்க்    35-40    20-25    0-3    1-5

மொத்த தொகுதிகள்    182

பெரும்பான்மை    92

குஜராத்

ஊடகங்கள்    பாஜ    காங்.    ஆம் ஆத்மி    மற்றவை

ஆஜ் தக்-ஆக்சிஸ் மை இந்தியா    129-151    16-30    9-21    2-6

ஏபிபி - சி வோட்டர்    128-140    31-43    3-11    2-6

நியூஸ் எக்ஸ் -ஜன் கி பாத்    117-140    34-51    6-13    1-2

ரிபப்ளிக் டிவி, பி-மார்க்    128-148    30-42    2-10    0-3

டைம்ஸ் நவ்-இடிஜி    139    30    11    2

டிவி 9 குஜராத்தி    125-130    40-50    3-5    3-7

ஜி நியூஸ்-பார்க்    110-125    45-60    1-5    0-4

* டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய வெற்றி

ஒருங்கிணைந்த டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதில் 50% வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த மாநகராட்சி தேர்தல் ஆம் ஆத்மி மிகப்பெரிய வெற்றியை பெறும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 146-175 வார்டுகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜவுக்கு  69-94 வார்டுகளும், காங்கிரசுக்கு 3-10 வார்டுகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஊடகங்கள்    பாஜ    காங்.    ஆம் ஆத்மி

ஆஜ் தக்-ஆக்சிஸ் மை இந்தியா    69-91    3-7    149-171

நியூஸ் எக்ஸ் -ஜன் கி பாத்    70-92    4-7    159-175

டைம்ஸ் நவ்-இடிஜி    84-94    6-10    146-156

Related Stories: