உலக அளவில் இந்தியா அளித்த உத்தரவாதங்களை காப்பாற்ற தமிழகம் உறுதுணையாக இருக்கும்: ஜி-20 மாநாடு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதுடெல்லி: ‘உலக அளவில் இந்தியா அளித்துள்ள  உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக  இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுவோம்’ என்று ஜி20 தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்தியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, சவுதி அரேபியா, ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்புக்கு ‘ஜி-20’ (குரூப் 20) என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த அமைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு உறுப்பு நாடுகள் தலைமை பொறுப்பை ஏற்கும். 2022ம் ஆண்டு இந்தோனேசியா தலைமையில் ஜி20 உச்சி மாநாடு அந்நாட்டின் பாலி தீவில் நடைபெற்றது. அதில், 2023ம் ஆண்டுக்கான ஜி20 அமைப்பின் தலைவர் பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவுக்கு ஜி20 மாநாட்டை நடத்தி அதற்கு தலைமை வகிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த ஒன்றிய அரசு விரும்புகிறது. இந்த மாநாடு தொடர்பாக 32 துறைகளின் சார்பில் 200 ஆலோசனைக் கூட்டங்களை அனைத்து முக்கிய நகரங்களிலும் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக நாடு முழுவதும் உள்ள தொல்லியல் சின்னங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாகவும் மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்தும் டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10.05 மணிக்கு விமானத்தில் டெல்லி சென்றார். டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலையில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் பியூஸ்கோயல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திரா எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய இருக்குமா என்று தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரு மாநிலங்களில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நேற்று வெளியானது. பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்புகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில், குஜராத்தில் பாஜ மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 110-151 தொகுதிகள் வரை பாஜ கைப்பற்றி 7வது முறையாக ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 16-60 தொகுதிகள் கிடைக்கும் என்றும், பெரிதும் எதிர்ப்பாக்கப்பட்ட ஆம் ஆத்மிக்கு 1-21 தொகுதிகள் மட்டுமே வெல்லும் என்ரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலிலும் ஆட்சியை பாஜ போராடி தக்க வைத்துக் கொள்ளும் என்று பல்வேறு கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜ 24-40 தொகுதிகள் வரை வெல்லும் என்றும், காங்கிரஸ் 26-40 தொகுதிகள் கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மிக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பிரதமர் மோடி வேண்டுகோள்

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இது ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்ள வேண்டிய தருணம். இதில் பெரிய வெற்றி அடைய, அனைவரும் தங்களின் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் தந்திட வேண்டும்’’ என வலியுறுத்தினார். கூட்டத்தில் பேசிய சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், ‘‘ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு என்பது சுழற்சி முறையில் ஒவ்வொரு உறுப்பு நாடுகளுக்கும் வழங்கப்படுவதாகும். இதை அரசின் சாதனையாக காட்டக் கூடாது’’ என வலியுறுத்தினர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘ஜி20 தலைவர் பதவி என்பது ஒரு கட்சியின் நிகழ்ச்சி அல்ல. முழு நாட்டிற்கும் உரியது’’ என்றார். பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதே போல, பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ஆர்ஜேடி கட்சிகளும் கூட்டத்தை புறக்கணித்தன.

* இந்தியில் மட்டும் பெயர் பலகை

பொதுவாக, ஒன்றிய அரசு தரப்பில் நடத்தப்படும் அனைத்து கட்சி கூட்டத்தில் கட்சி தலைவர்களின் பெயர்கள் எழுதப்பட்ட பெயர் பலகை ஆங்கிலத்திலும், இந்தியிலும் இடம் பெறுவது வழக்கம். ஆனால் நேற்றைய கூட்டத்தின் போது, அனைத்து கட்சி தலைவர்களுக்கும் முன்பாக வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் இந்தி மட்டுமே இருந்தது. இந்தியை திணிக்கவில்லை என ஒன்றிய பாஜ அரசு கூறிவரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக ஆங்கிலத்தில் எழுதப்படாமல் இந்தியில் மட்டும் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: