சிங்கப்பூர் மருத்துவமனையில் லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

பாட்னா: கால்நடைத் தீவன வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு பல்வேறு உடல் நலப்பிரச்னைகள் காரணமாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். லாலுவின் மூத்த மகளான ரோகினி ஆச்சார்யா தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக தர முன்வந்தார்.இதைத் தொடர்ந்து, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்காக லாலு சமீபத்தில் சிங்கப்பூர் சென்றார்.

இந்நிலையில், சிங்கப்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக லாலுவின் மகன் தேஜஸ்வி டிவிட்டரில் நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.  அதில், ‘‘சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. எனது தந்தை ஐசியுவுக்கு மாற்றப்பட்டு நலமுடன் இருக்கிறார். எனது சகோதரி ரோகினியும் நலமுடன் இருக்கிறார். அறுவைசிகிச்சை வெற்றி பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’’ என கூறி

உள்ளார்.

Related Stories: