மதுரை மாட்டுத்தாவணியில் பிரமாண்டமான புதிய ஷோரூம் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் திறப்பு

மதுரை: தமிழகத்தின் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சென்னையை தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணியில் 6 லட்சம் சதுர அடியில் பிரமாண்டமாக புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. புதிய ஷோரூமை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் எஸ்.ராஜரத்னம் திறந்து வைத்தார். ஐம்பது ஆண்டுகளை கடந்து பொன்விழா கண்ட சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்  தனது புதிய ஷோரூமை மதுரை மாட்டுத்தாவணியில் நேற்று திறந்து உள்ளது. பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம் நிறைந்த தென் தமிழகத்தின் மையப்பகுதி மதுரையில் இந்த புதிய ஷோரூம் திறப்பு விழா கண்டிருக்கிறது. மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், காந்தி மியூசியம் என பாரம்பரிய அடையாளத்துடன், சமூகப் பிணைப்புடன் தென்னகத்தின் 10 மாவட்டங்களை இணைக்கும் வகையில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மதுரையில் திறக்கப்பட்டுள்ளது.

5 ஏக்கர் பரப்பளவில் 6 லட்சம் சதுரடியில் 10 மாடிகள் கொண்ட விற்பனை பிரிவு மற்றும் ஆயிரம் கார்கள் நிறுத்தும் வசதியுடன் மதுரை மாநகரத்தின் சிகரமாக மாட்டுத்தாவணியில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ஷோரும் திறக்கப்பட்டிருக்கிறது. பிரமாண்டமான இந்த புதிய ஷோரூமை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் எஸ்.ராஜரத்னம் நேற்று திறந்து வைத்தார். சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குநர்கள் சபாபதி,  ரோஷன் ரத்னம்,  யோகேஷ் ரத்னம், இயக்குநர் ரேவதி ராஜரத்னம் மற்றும் சுனிதா சபாபதி, முக்கிய பிரமுகர்கள்,  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி ஆபரணங்கள், பட்டு, ஜவுளிகள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சேலைகள், ஆயத்த ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள், பரிசு பொருட்கள், சுற்றுலா மற்றும் பயண பயன்பாட்டுப் பொருட்கள், பர்னிச்சர், ஆப்டிகல்ஸ், மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் பழங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் என மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களும் தனித்தனி விற்பனை பிரிவுகளில் உள்ளன. வாடிக்கையாளர்களின் சவுகரியங்களை கருத்தில் கொண்டு பல்வேறு சொகுசுமிக்க வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் தரைத்தளத்தில் 40 ஆயிரம் சதுர அடி  பரப்பளவில் அசத்தலாக வடிவமைக்கப்பட்ட சூப்பர் ஜூவல்லரியில் திறப்பு விழா சலுகையாக வரும் 11ம் தேதி வரை ஒரு பவுன் தங்க நகைக்கு ₹2000ம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: