கவர்னர் பதவியை ரத்து செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

புதுடெல்லி: கவர்னர் பதவி ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் தலைநகர் டெல்லியில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி ராஜா கூறுகையில்,‘நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதுகாப்பதற்கு ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும். ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய அரசானது அரசியலமைப்பு அடித்தளங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

இதற்காக  ஆர்எஸ்எஸ் கொள்கையால் வழிநடத்தப்படும் ஒன்றிய அரசினால் ஆளுனர் அலுவலகங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆளுனர் அலுவலகங்கள் பாஜவின் முகாம் ஆக செயல்பட வைக்கப்பட்டுள்ளன. கவர்னர் பதவியை ரத்து செய்யக்கோரும் நேரம் வந்துவிட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி கருதுகின்றது’ என்று தெரிவித்தார்.

Related Stories: