பாக். தூதரகம் மீது தாக்குதல் ஐஎஸ் தீவிரவாதி கைது

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரக வளாகத்தில் வெள்ளியன்று பாகிஸ்தான் தூதர் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் தூதர் காயமடையவில்லை.

எனினும் பாகிஸ்தானை சேர்ந்த அவரது பாதுகாவலர் காயமடைந்தார். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பின் ஆப்கானிஸ்தான் பிரிவான கொராசான் மாகாணத்தின் உள்ள ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் தாக்குதலில் தொடர்புடைய ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளதாக தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: