57 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை நேபாளத்தில் மீண்டும் பிரதமராகிறார் ஷெர் பகதூர்?

காத்மண்டு: நேபாளத்தில் 57 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் உள்ள நேபாள காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேபாளத்தில் கடந்த 20ம் தேதி நாடாளுமன்றத்துக்கும், 7 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மாதம் 21ம் தேதியில் இருந்து தொடர்ந்து நடந்து வந்தது. இதன் முடிவுகளை நேபாள தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில், ஆளும் நேபாளி காங்கிரஸ் 57 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரு கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதன் கூட்டணி கட்சிகளான சிபிஎன் (மாவோயிஸ்ட்) 18, சிபிஎன் (சோசலிஸ்ட்) கட்சி 10, லோக்தந்திரிக் சமாஜ்வாடி 4, ராஷ்டிரிய ஜனமோர்சா ஒரு தொகுதி  என ஆளும் கூட்டணி மொத்தம் 90 தொகுதிகளில் வென்றுள்ளது. முன்னாள் பிரதமர் கேபி. சர்மா ஒலி தலைமையிலான சிபிஎன் (யுஎம்எல்) கட்சி 44 இடங்களை கைப்பற்றி உள்ளது. இதனால் தற்போது பிரதமராக இருக்கும் ஷெர் பகதூர் தேவ்பா தலைமையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.

Related Stories: