10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பராமரிப்பில்லை; மழையால் 7 தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்தன: மேலும் 20 வீடுகள் சேதம், காலனி மக்கள் கலக்கம்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பராமரிப்பு இல்லாததால் 7 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் காலனி மக்கம் அச்சத்தில் உள்ளனர். சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 30க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு காலனி மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் பருவமழையால் இந்த காலனியில் உள்ள 7 வீடுகள் சேதமடைந்திருந்தன.

அதில் நேற்று  3 வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது. மேலும் 20 வீடுகள் எப்போதும் கீழே விழும் நிலையில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி காலத்தில் வீடுகளை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இடிந்து விழுந்த 3 வீடுகளையும் மற்றும் சேதமடைந்த 20 வீடுகளையும் மறு சீரமைத்து செய்து பழுது நீக்கிட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: