நெமிலி அருகே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து இடிந்து விழும் அபாயத்தில் ஊராட்சி அலுவலக கட்டிடம்

நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உளியநல்லூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருகிறது. இக்கட்டிடம் கட்டி சுமார் 43 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. பழமையான இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுக்கள் உதிர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்திற்கு பொதுமக்கள் வந்து செல்ல பெரும் அச்சத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே ஆய்வு மேற்கொண்டு  இந்த பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: