சிறுமியை கடத்தி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூரை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் ஜெயக்குமார்(22) கூலி தொழிலாளி. இவர், 17 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியை பைக்கில் கடத்திச் சென்று புதுக்குடி கரைமேடு பகுதியில் முந்திரி காட்டில் உள்ள  தனி வீட்டில் வைத்து கடந்த 10 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அவரது தாயும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியை கடந்த 10 நாட்களாக காணவில்லை என பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் 10 நாட்கள் கழித்து தனது மகள் தானாக வீட்டிற்கு வந்தார். சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது அந்த சிறுமி நடந்ததை கூறி அழுதுள்ளார். இது பற்றி சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஜெயக்குமார் மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் சாந்தி ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: