நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ள காரணத்தினால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த மாதம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகப்படியான மழை பெய்தது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதியில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளனர்.   

இந்நிலையில் இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: