×

ஜி-20 ஆலோசனையில் பங்கேற்பு: எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சி

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் கடின உழைப்பால், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் உயர்மட்ட பிரமுகர்களுடன் நல்லுறவைப் பேணி, இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியதன் காரணமாக, ஜி-20ன் தலைமைப் பொறுப்பு சாத்தியமானது. இது 130 கோடி இந்தியர்களை தலைநிமிரச் செய்துள்ளது. ஜி-20 தலைவர் பதவியை நமது நாடு பெற்றிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.

மேலும் ஜி-20 தலைமைப் பொறுப்பு என்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய அளவுக்கு பெருமைக்குரியதாகும். பிரதமர் தலைமையில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில், ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறவுள்ள ஜி-20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : G ,20 ,Edappadi Palaniswami , Participation in G-20 Consultation: Edappadi Palaniswami happy
× RELATED ஜி பே ஸ்கேன் பண்ணுங்க… மோடி ஸ்கேம் பாருங்க… தெறிக்கவிட்ட போஸ்டர்கள்