சபரிமலையில் நடைபெற்ற புஷ்பாபிஷேக பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

கேரளா: சபரிமலை கோயிலில் ஐயப்பனுக்கு மிகவும் பிடித்த புஷ்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். சபரிமலையில் தினமும் 50,000-க்கு மேற்பட்ட பக்தர்கள் தெய்வ வழிபாடு செய்து வருகின்றனர். சிறப்பு பூஜைகளில் பங்கேற்பதற்காக பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் வழிபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மாலையில் நடைபெற்ற புஷ்பாபிஷேக சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் ஒரு புஷ்பாபிஷேகத்திற்கு ரூ.12,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 வகையான மலர்களை கொண்டு புஷ்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

Related Stories: