இந்தோனேசியா ஜாவா தீவில் எரிமலை வெடிப்பு; சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியேறியதால் அப்பகுதி கிராம மக்கள் வெளியேற்றம்!

இந்தோனேசியாவின் உள்ள லுமாஜாங் நகரில், செமேரு எரிமலை உள்ளது. இந்த எரிமலை சுமார் 12,000 அடி உயரம் கொண்டதாகும். இந்தோனேசியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக செமேரு எரிமலையின் குவி மாடம் சரிந்தாள் எரிமலையில் இருந்து நெருப்பு குழும்பு வெளியேற தொடங்கியது.

எரிமலையில் இருந்து சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் 5,000 அடி உயரத்துக்கு சாம்பல் புகை மேலே எழும்பியுள்ளது. அங்குள்ள நகரங்கள், கிராமங்களில் எரிமலை சாம்பல் பரவியுள்ளது.

எரிமலை வெடிப்பு காரணமாக 2,000 மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டு உள்ளனர். எரிமலை வெடிப்பால் சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியேற்றத்தை அதிகாரிகள் இது தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

செமேரு எரிமலையின் ஆக்ரோஷம் இன்றும் அதிகரித்து கொண்டே இருப்பதால் நேற்றை விட இன்று சாம்பல் புகை வெளியேறும் அளவு உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செமேரு எரிமலை வெடித்து சிதறியதில் 51 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதே போன்று ஹவாய் தீவில் உள்ள உலகில் மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றான மவுனா லாவோ எரிமலையில் தீக்குழம்புகள் அதிக சீற்றத்துடன் கொந்தளித்து காணப்படுகிறது. பசுபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள இந்த எரிமலை பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெடித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தீக்குழம்புகளை வெளியேற்றி வருகிறது. உலை கொதிப்பது போல செக்கச்சிவந்த நிறத்தில் தீக்குழம்புகள் கொந்தளித்து காணப்படுகிறது.

Related Stories: