துபாயில் தேவிபட்டிணம் சங்க கலந்துரையாடல் நிகழ்ச்சி

அமீரகத்தின் 51ம் தேசிய தின கொண்டாட்ட நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் நலச்சங்கம் டிசம்பர் 3 அன்று சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியை மூத்த உறுப்பினர்கள் சீனி ஜலால் மற்றும் சீனி இப்ராஹிம் அவர்களின் தலைமையில் தேவிபட்டின நலச்சங்க தலைவர் ஃபலில் அவர்கள் வரவேற்புரை வழங்க நலச்சங்கத்தின் துபாய் மண்டல செயலாளர் சமீர் அவர்கள் நலச் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவைகள் குறித்து விளக்கம் அளித்தார் மேலும் சிறப்பு விருந்தினர்களாக ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், கிரீன் குலோப் ஜாஸ்மின் பங்கேற்றனர்.

மேலும் பத்திரிக்கையாளர் நஜீம் மறைக்காயர், எழுத்தாளர் வி.கலத்தூர் கமல் பாட்ஷா மூத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். துவா ஒருங்கிணைப்பாளர் நிஜாமுதீன் மற்றும் செய்யது அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியை SPS நிஜாம் அக்பர் அவர்கள் தொகுத்து வழங்கினார். இறுதியாக ஆஷிக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 51 ஆம் ஆண்டு தேசிய தினத்தை முன்னிட்டு 51 பரிசுகள் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Related Stories: