டெல்லியில் காற்று மாசு மீண்டும் அதிகரிப்பு: கட்டுமான பணிகள், கட்டட இடிப்பு பணிகளுக்கு கட்டுப்பாடு..!!

டெல்லி: அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியாக தலைநகர் டெல்லியில் கட்டுமான பணிகள், கட்டட இடிப்பு பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லி முழுவதும் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையை தாண்டி அபாய அளவை எட்டி இருக்கிறது. இதனால் அதிகாலை நேரங்களில் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களை இயக்குவதிலும், சுவாசிப்பதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த காற்று தர மேலாண்மை ஆணையம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி மற்றும் தேச நலனுக்கான அத்தியாவசிய கட்டட பணிகள் தவிர்த்து பிற கட்டுமான பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மெட்ரோ ரயில் சேவை பணிகள், விமான நிலையம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து முனையங்கள் சார்ந்த கட்டுமான பணிகளுக்கு தடை உத்தரவு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: