விவசாயிகள் நஷ்டமடைவதை தடுக்க காய்கறிகளுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு அரசே கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

மாவட்டங்களில் வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தைகளில் உரிய விலை கிடைக்காததால் சாலைகளில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளன. இது வேதனையளிக்கிறது. இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு அனைத்து காய்கறிகளுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிப்பதன் மூலம் தான் காய்கறிகளை பயிரிடும் உழவர்களுக்கு லாபம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்க வேண்டும்.

அத்துடன்அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதற்கு வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும். கொள்முதல் விலை வீழ்ச்சியால் உழவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க காய்கறிகள், பழங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கவும், கூட்டுறவு அமைப்புகள் மூலம் அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: