ஓய்வு பெற்றோர் நல அமைப்பு அறிவிப்பு அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி டிச.29ல் மறியல் போராட்டம்

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உடனடியாக வழங்க வலியுறுத்தி வரும் 29ம் தேதி அனைத்து போக்குவரத்து தலைமையகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு அறிவித்துள்ளது.  

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

2015-ம் ஆண்டு நவம்பர் மாதம், போக்குவரத்து ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 119%அகவிலைப்படியாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் இந்த அகவிலைப்படி உயர்வு என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. அகவிலைப்படி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அதற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக தலைமையகங்கள் முன்பு வரும் 29ம் தேதி மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம்.

Related Stories: