பாகிஸ்தான் எல்லையில் டிரோன் மூலம் கடத்திய 3 கிலோ ஹெராயின் பறிமுதல்

சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு டிரோனில் கடத்திய 3 கிலோ ஹெராயின் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். பாகிஸ்தானில் இருந்து போதை பொருட்கள்  பஞ்சாப் எல்லை பகுதிக்குள் டிரோன்  மூலம் கடத்துவது அதிகரித்துள்ளது. டரன் டரன் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து போலீசார் நடத்திய வேட்டையில் டிரோனில் கடத்திய 3 கிலோ ஹெராயின் சிக்கியது.

இதுகுறித்து மாநில டிஜிபி கவுரவ் யாதவ் டிவிட்டரில் பதிவிடுகையில்:

டரன் டரன் மாவட்டத்தில் உள்ள வல்தோகாவில் டிரோனில் இருந்த 3 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். இதே போல் நேற்று முன்தினம் பசில்கா மாவட்டத்தில் டிரோன் மூலம் இந்திய எல்லைக்குள் போடப்பட்ட 25 கிலோ ஹெராயினை பிஎஸ்எப் வீரர்கள் கைப்பற்றினர்.கடந்த 1ம் தேதியன்று டரன்டரன்னில்   டிரோனில் இருந்து 5 கிலோ போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: