×

பனீர் பட்டர் மசாலா

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி, அடுப்பை அணைத்து ஆற விடவும். இதை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போக வதக்கி, அரைத்த வெங்காயம், தக்காளி விழுது சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும்.

பிறகு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் சேர்த்து சிம்மில் வைத்து வேக விடவும். பிறகு, பனீரை சேர்த்து எட்டு நிமிடம் கழித்து, முந்திரி விழுது, கஸூரி மேத்தியைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். இந்த மலாசாவை சப்பாத்தி, நான், ரொட்டி ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Tags :
× RELATED அனஸ்வரா ராஜன் ஃபிட்னெஸ்