தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு சீட் தருவது இஸ்லாமிற்கு எதிரானது: இமாம் பேச்சு

அகமதாபாத்: ‘தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு சீட் தரும் எந்த கட்சியும் இஸ்லாமிற்கு எதிரானது’ என அகமதாபாத் ஜமா மஸ்ஜித்தின் ஷாஹி இமாம் ஷபீர் அகமது சித்திக் கூறி உள்ளார். குஜராத் சட்டப்பேரவைக்கான 2வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்க உள்ளது.

இந்நிலையில், அகமதாபாத் ஜமா மஸ்ஜித்தின் ஷாஹி இமாம் ஷபீர் அகமது சித்திக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:

‘‘இஸ்லாமில் தொழுகைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஒரு பெண்ணாவது தொழுகை செய்து பார்த்திருக்கிறீர்களா? பெண்கள் தொழுகை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

 ஏனெனில், இஸ்லாமில் பெண்களுக்கு என்று ஒரு அந்தஸ்து உள்ளது. பெண்கள் பொதுமக்கள் மத்தியில் வருவதை இஸ்லாமில் நியாயப்படுத்தியிருந்தால், அவர்கள் மசூதிக்குள் நுழைவதில் இருந்து தடுக்கப்பட்டிருக்க மாட்டார்கள். தேர்தலில் பெண்களுக்கு சீட் தரும் எந்த கட்சியும் இஸ்லாமின் கொள்கைகளுக்கு எதிரானது. ஏன் உங்களிடம் ஆண் வேட்பாளர்கள் இல்லையா? பெண்களுக்கு சீட் தருவது எங்கள் மதத்தை பலவீனப்படுத்தும்’’ என்றார்.

Related Stories: