உதவி தொகை ரூ.1,500 ஆக உயர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுதிறனாளிகள் சங்கம் வரவேற்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவி தொகையை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கியுள்ளதை மாற்று திறனாளிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவரும், நலவாரிய உறுப்பினருமான ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதோடு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

மேலும் ஒரு சலுகையாக மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை ரூ.1000லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: