சுரங்க வெடிவிபத்து பாக்.கில் 6 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர். பாகிஸ்தான், பலுச்சிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இதில் நேற்று முன்தினம் 1,500 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் நிலக்கரி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென காஸ் வெடித்ததில் தீப்பிடித்தது.  தீ பரவியதில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும்  மீட்பு படையினர் மற்றும் தொழிலாளர்கள் விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 5 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டனர். மேலும் ஒருவரின் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Related Stories: