பாக். தூதரக துப்பாக்கிசூடு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது

இஸ்லாமாபாத்: காபூலில் பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த துப்பாக்கிசூட்டுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாக வேலை பார்ப்பவர் உபைதுர் ரஹ்மான் நிஜாமானி. கடந்த வாரம் தூதரக கட்டிடத்தின் பின் பகுதியில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது, மர்ம நபர்கள்  துப்பாக்கியால் சுட்டனர். உடனிருந்த  பாதுகாவலர் குறுக்கே பாய்ந்து, நிஜாமானியை காப்பாற்றினார். இதில் நிஜாமானி காயமின்றி தப்பினார்.  இதற்கிடையே, பாகிஸ்தான் துாதரக துப்பாக்கிசூட்டுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Related Stories: